Local

வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா!

வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த விலைமாது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுவோர் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் முடிவுகளின் அடிப்படையில் குறித்த பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்ணுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தலைமறைவாகி இருந்த நிலையில் அவர் பொலிஸாரின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, அவரிடம் அண்மைக் காலமாக நெருங்கி பழகியவர்களை கண்டறியும் நடவடிக்கையில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். (Tamilan)

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading