Local

வவுனியாவில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகம் 42 வயது நபர் கைது!

வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

10 வயது சிறுமி தினமும் காட்டுப்பகுதிக்கு அருகாமையில் உள்ள வீதியினூடாக செல்வதை தொடர்ந்து அவதானித்த குறித்த நபர் வீரபுரம் காட்டுப்பகுதியில் வைத்து சிறுமியை மறித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஓருவரை கைது செய்து இன்று நீதிமன்றில் முற்படுத்தியதன் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட, சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading