Local

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்…!!!

ஜப்பானில் வாகன விலை குறைந்ததையடுத்து, இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை அதிகபட்சமாக 1.5 மில்லியன் ரூபா வரை குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் (VIAL) தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்படாத வாகன இறக்குமதிகள் காரணமாக, பதிவு செய்யப்படாத வாகனங்கள் சந்தையில் குவிந்துள்ளன என்றும், இதனால் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை தனிப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 705 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளன.

விலை குறைந்துள்ளது

அவர் மேலும் தெரிவிக்கையில், “விலை மாற்றங்களின் அடிப்படையில், பதிவு செய்யப்படாத ஹோண்டா வெசல் Z Play 2025 SUV தற்போது 23.5 மில்லியன் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல் | Imported Vehicles Prices Decreased In Sri Lanka

முன்னர் இது 25.5 மில்லியன் ரூபாயாக இருந்தது. டொயோட்டா யாரிஸ் (Toyota Yaris) 11.5 மில்லியன் ரூபாயிலிருந்து 10.5 மில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது.

சுசுகி ஆல்டோ ஹைப்ரிட் (Suzuki Alto Hybrid) தற்போது 7.9 மில்லியன் ரூபாயிலிருந்து 7.3 மில்லியன் ரூபாவாகவும், சுசுகி வாகன் ஆர் (Suzuki Wagon R) 7.8 மில்லியன் ரூபாவிலிருந்து 7.3 மில்லியன் ரூபாவாகவும் குறைந்துள்ளது.

மின்சார வாகனங்களின் இறக்குமதி

மேலும் டொயோட்டா தற்போது இலங்கையின் இறக்குமதி வாகனச் சந்தையில் முன்னணியில் உள்ளது. ரைஸ் மற்றும் யாரிஸ் மொடல்கள் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல் | Imported Vehicles Prices Decreased In Sri Lanka

சிறிய வாகன பிரிவில் நிசான் (Nissan) பிராண்ட் விற்பனை வேகமாக உயர்ந்துள்ளதுடன், ஆனால் சுசுகி வாகன் ஆர் (Suzuki Wagon R) மொடலில் புதிய பதிப்புகள் அறிமுகப்படுத்தப்படாததால் அதன் விற்பனை குறைந்துள்ளது.

இதேவேளை, மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, தற்போது ஹோண்டா, வெசல் SUV பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது” என மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading