38 வயது ஆசிப் அப்ரிடி பாக். அணிக்கு…!!!
தென்னாபிரிக்காவுக்கு எதிராக ராவல்பிண்டியில் நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பில் 38 வயதாகும் இடது கை சுழல் வீரர் ஆசிப் அப்ரிடி தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆட அழைக்கப்பட்டுள்ளார்.
பெஷாவரைச் சேர்ந்த அப்ரிடி 2009 ஆம் ஆண்டு தனது கன்னி முதல்தர போட்டியில் அறிமுகம் பெற்று இதுவரை 57 முதல் தரப் போட்டிகளில் ஆடிய நிலையிலேயே பாகிஸ்தான் அணிக்கு அறிமுகமாகியுள்ளார். எனினும் அவர் ஊழல் தடுப்பு விதியை மீறியதற்காக 2023 இல் பாக். கிரிக்கெட் சபையால் இரண்டு ஆண்டுகள் தடைக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.
இதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமிர் இலாஹி 1952 இல் தனது 44 ஆவது வயதில் பாகிஸ்தான் அணிக்கான தனது கன்னி டெஸ்டில் ஆடியபோதும் அவர் அதற்கு முன்னர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளார்.

You must be logged in to post a comment.