Local

வாகன இறக்குமதிக்கு அனுமதிக்குமா அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெற்றோலியம் கொள்வனவுக்காக 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்ட போது அது டொலரின் பெறுமதியையும் பாதித்துள்ளது.

இதனால் வாகன இறக்குமதி போன்ற அதிக டொலர்கள் செலவாகும் விடயத்தை மேற்கொள்ள முடியாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 900 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் கடுமையான ஆய்வுகளுடன் பொருளாதாரத்தை நிர்வகித்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான கையிருப்புகளை விடுவித்து டொலரை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்த போதிலும் டொலரின் பெறுமதி தேவை மற்றும் வழங்கல் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading