Local

வாகன வருமான அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரம் வௌியிடுதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது..

தற்போது தீவிரமடைந்துள்ள கொவிட் 19 தொற்று நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு குறித்த காலப்பகுதியினுள் மேல் மாகாணத்தினுள் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வௌியிடுதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியினுள் காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப் பத்திரத்திற்கு அரசாங்கத்தினால் பயணத் தடை நீக்கப்படும் வரையில் அபராதம் அறவிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading