வாகன விபத்தில் 19 இளம் பெண்கள் பலி!
எகிப்தின் வடக்கே #Menoufia எனும் பகுதியில் இளம் பெண்கள் பயணித்த #மைக்ரோ பஸ் ஒன்றும், டாங்கர் #லாரி ஒன்றும், நேருக்கு நேர் மோதியதில் அதில் பயணித்தவர்களில் 19 இளம் பெண்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். #சாரதியும் உயிரிழந்தார்.
சிறிய நாட்கூலிக்காக தினமும் விவசாய #பண்ணை ஒன்றில் பணியாற்ற செல்லும் 15 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்களே வேலை முடிந்து வீடு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் #KafrAlSanabsa எனும் கிராமத்தை சேர்ந்த ஏளை இளம் பெண்கள்.
அனைவரது ஜனாஸாக்களும் (சடலங்கள்) நேற்று ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
எகிப்தை உலுக்கிய இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரிதாப அலையை ஏற்படுத்தியுள்ளது.

You must be logged in to post a comment.