World

வாடகைக்கு விடப்படும் காதலிகள்!

சீனாவில் தனக்கு காதலி இல்லை என வருத்தப்படும் பெரும்பாலான இளைஞர்கள் விடுமுறைக்கு வீடு செல்லும் போது வாடகைக்கு காதலிகளை அல்லது தோழிகளை தம்முடன்  அழைத்துச் செல்லும் கலாசாரம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை இலகுவாக மேற்கொள்ள  பல செயலிகள் காணப்படுவதாகவும் இதன் மூலம்  சுமார் 1,999 யுவான் வரை (இலங்கை மதிப்பில் 61,740  ரூபாய்) செலுத்தி தமக்கு விருப்பமான பெண்ணை அழைத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அழைத்துச் செல்லப்படும் பெண் , உணர்ச்சிபூர்வமான ஆதரவை குறித்த இளைஞருக்கு அளிப்பார் எனவும், அவருடைய காதலியைப் போல நடந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ‘அப்பெண்ணை இளைஞர் தொட  முடியாது‘ என்ற  நிபந்தனை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading