World

வானிலை செய்தி அறிக்கையில் ஆபாச வீடியோ ஒளிபரப்பானதால் பரபரப்பு!

அமெரிக்காவில் டிவி சேனல் ஒன்றில் வானிலை அறிக்கையின் போது ஆபாச வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள தனியார் டிவி சேனல் ஒன்றில் செய்தியாளர் வானிலை அறிக்கையை படித்து கொண்டிருக்கும் போது ஆபாச வீடியோ ஒளிபரப்பானது.

முதலில் இது குறித்து அந்த சேனலுக்கு எதுவும் தெரியவில்லை. பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து அந்த வீடியோ உடனே நிறுத்தப்பட்டது. சுமார் 13 வினாடிகள் அந்த ஆபாச படம் ஒளிபரப்பானதாக கூறப்படுகிறது.

இந்த தவறை அடுத்து சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் இதுகுறித்து மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. இருப்பினும் இந்த நிகழ்வு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

அது மட்டும் இல்லாமல் ஆபாசப் படங்கள் பொதுவில் காட்டப்படுவதாகக் கூறி பலர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

பெரும்பாலோர் தங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் செய்தியை பார்த்து கொண்டு இருந்தபோது இதுபோன்ற ஆபாச காட்சிகளை காட்டியதாக புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading