World

வாயால் வடை சுடும் Influencers களுக்கு ஆப்பை தயார் செய்த சீனா!

 

உலகமே கொரோனா பொதுமுடக்கத்தில் முடங்கிக் கிடந்தபோது, ஸ்மார்ட்ஃபோன் திரைகளுக்குள் ஒரு புதிய சக்தி மலர்ந்தது. அவர்கள்தான் சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்கள் (Social Media Influencers).

இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களில் ஃபாலோவர்களைக் குவித்து வைத்திருக்கும் இவர்கள், தாங்கள் பகிரும் தகவல்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இன்று, பாரம்பரிய விளம்பர முறைகளைக் கடந்து, பெரிய நிறுவனங்கள் கூட தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த இவர்களைத்தான் நாடி வருகின்றன. இந்த இன்ஃப்ளூயன்சர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவர்களின் வளர்ச்சி வேகமாக இருந்தாலும், இதுவே ஒரு ஆபத்தாகவும் மாறி வருகிறது.

போதிய புரிதல் இல்லாமல் அல்லது முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், சிலர் பணத்துக்காக மருத்துவ ரீதியிலான, நிதி ரீதியிலான, சட்டம் சார்ந்த தகவல்களைப் பகிர்கின்றனர். இவர்களைப் பின்தொடரும் அப்பாவி மக்கள், இவை உண்மை என நம்பி அவற்றைப் பின்பற்றிப் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக, மருத்துவம் பற்றி பேச மருத்துவரே தேவை. ஆனால், பட்டம் பெறாத இன்ஃப்ளூயன்சர்கள் சிலர், பணம் கிடைக்கிறது என்பதற்காக ஆரோக்கியக் குறிப்புகளை வழங்குவது பலரது உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கிறது.

🇨🇳 சீனா எடுத்த அதிரடி நடவடிக்கை
இந்த மோசமான சூழலைக் கட்டுப்படுத்த, சீனா அரசு ஒரு பெரிய ‘செக்’ வைத்துள்ளது.

சீன அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் முக்கிய அம்சம்:

கட்டாய கல்வித் தகுதி: மருத்துவம், உடல் ஆரோக்கியம், நிதி, சட்டம் அல்லது கல்வி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளில் (Sensitive Topics) பேசும் இன்ஃப்ளூயன்சர்கள், கட்டாயம் அது சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பையோ (Degree) அல்லது சான்றிதழ் படிப்பையோ முடித்திருக்க வேண்டும்.

சரிபார்ப்பு: சமூக வலைதளங்கள், இத்தகைய இன்ஃப்ளூயன்சர்கள் முறையான சான்றிதழ்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களின் உள்ளடக்கத்தை (Content) அனுமதிக்க வேண்டும் என்று சீனா அரசு உத்தரவிட்டுள்ளது.

விளம்பரத் தடை: மருத்துவப் பொருட்கள் மற்றும் மருத்துவ சேவைகளை விளம்பரம் செய்வதற்கும் சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஆதாரம் அவசியம்: ஒரு தகவலைப் பகிரும் போது, அது எந்த ஆதாரத்தில் இருந்து பெறப்பட்டது என்பதையும் அவர்கள் கட்டாயம் பகிர வேண்டும்.

அக்டோபர் 25-ஆம் தேதியிலிருந்து இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. போலியான தகவல்கள் ஆன்லைனில் பரவுவதைத் தடுத்து, மக்களின் நலன் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என்று சீனா அரசு விளக்கம் அளித்துள்ளது.

🗣️ விமர்சனங்களும் கேள்விகளும்
இந்தச் சட்டம், சில இன்ஃப்ளூயன்சர்கள் மத்தியில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. இது கிரியேட்டிவிட்டியையும் கருத்து சுதந்திரத்தையும் தடுக்கும் வகையில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

சீனா அரசின் இந்த நடவடிக்கை, உலகின் மற்ற நாடுகளையும், குறிப்பாக இந்தியாவையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது.

இங்கும் இதே போன்ற சட்டம் தேவையா?

சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இது மக்களின் உடல்நலம் மற்றும் நிதி சார்ந்த வாழ்க்கையில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய சூழலில், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சீனாவைப் போலவே இலங்கையிலும் இன்ஃப்ளூயன்சர்களுக்குக் கல்வித் தகுதி மற்றும் சான்றிதழ் அடிப்படையிலான கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது அவசியமா?

Comment செய்யுங்கள்

#TamilNews #SriLankaNews

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading