Cinema

வாய் கொழுப்பால் வாய்ப்பை இழந்த வடிவேலு!

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வடிவேலுவால் தனுஷ் அசிங்கப்படுத்த விஷயத்தை இயக்குனர் சுராஜ் கூறியிருக்கிறார்.

அதாவது   சுராஜ் இயக்கத்தில் தனுஷ் படிக்காதவன் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் முதலில் விவேகிற்கு பதிலாக வடிவேலுதான் நடித்திருந்தார்.  ஆரம்பத்தில் இதற்காக இரண்டு மூன்று நாட்கள் படப்பிடிப்பும் சென்றுள்ளது.

அப்போது தனுஷ் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் சினிமாவில் வடிவேலு உச்சத்தில் இருந்தார்.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் எல்லோர் முன்னிலையிலும் தனுஷை திட்டி வடிவேலு அவமானப்படுத்தி விட்டாராம். இதனால் தனுஷுக்கு அந்த சமயத்தில் தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு தான் வடிவேலுக்கு பதிலாக விவேக்கை படக்குழு படிக்காதவன் படத்தில் போட்டு இருந்தனர். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் தனுஷ் மற்றும் விவேக் காம்போவில் நிறைய படங்கள் வெளியாக தொடங்கியது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading