Local

வாழ்க்கை செலவு அதிகரிப்பதால் நாட்டில் அமைதியின்மையையும் ஆர்ப்பாட்டங்களையும் உருவாக்கும் அபாயம்!

வாழ்க்கை செலவு அதிகரிப்பு காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் எதிர்ப்புகள் அதிகரித்துவருகின்றன என ஐக்கிய மக்கள்ச சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

விலைகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் மக்கள் மீது சுமை சுமத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சந்தையில் செயற்கையாக தட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள அவர் வர்த்தகர்களை பதுக்கிவைத்துள்ள பொருட்களை மீட்க்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பொருட்களின் விலைகளை  அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை  எடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விலைகளை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் 15 வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள ஒரு வர்த்தமானி அறிவித்தலைiயாவது இரண்டு மாதத்திற்காவது இறுக்கமாக நடைமுறைப்படுத்தி காட்டவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கத்தினால் எந்த திட்டத்தினால் இரண்டு மாதங்களிற்கு நடைமுறைப்படுத்த முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் நாட்டில் அமைதியின்மையும் ஆர்ப்பாட்டங்களும் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading