Cinema

விக்ரம் படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது!

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. 15 வருடங்களுக்கு பிறகு கமல் இப்படத்தில் போலீசாக நடிக்கவிருக்கிறார். கமலின் சொந்த நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அனிரூத் இசையில் உருவாகும் இப்படத்தில் மலையாள நடிகர்கள் பகத் பாசில், அந்தோணி வர்கீஸ், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த படத்தின் பணிகள் தொடங்கின. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

விரைவில் படப்பிடிப்பை தொடங்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இப்படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். 

விக்ரம் படத்தின்  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டார். வித்தியாசமாக இருக்கும் இந்த ஃப்ர்ஸ்ட் லுக்கில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 

லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் பதிவில், “யுத்ததால் அதோ அதோ விடியுது, சத்ததால் அராஜகம் அழியுது, ரத்ததால் அதோ தல உருளுது, சொர்க்கங்கள் யுதோ யுதோ தெரியுது, துடிக்குது புஜம், ஜெயிக்குது நிஜம்” என குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, விருமாண்டி படத்தின் போஸ்டரை போலவே விக்ரம் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading