Cinema

விஜயகாந்தின் செயலால் பதறிப்போன ரஜனிகாந்த்!

தமிழ் சினிமாவில் தனது நிறத்தின் காரணமாக பல படங்களில் நிராகரிக்கப்பட்ட நடிகர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். அந்த காலகட்டத்தில் தான், ரஜினிகாந்த் முன்னணி நடிகராக உயர்ந்து வருகிறார்.

விஜயகாந்தின் உண்மையான பெயர் விஜயராஜன் என்பதை நாம் அறிவோம். ஆனால், சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்று எண்ணிய பிரபல இயக்குனர் எம். ஏ. ராஜா, விஜயராஜன் என்ற பெயரை மாற்றி, ரஜினிகாந்த் என்ற பெயரை போல் இருக்க வேண்டும் என்று விஜயகாந்த் என வைத்துள்ளார்.

இதன்பின் பல படங்களில் நடிக்க துவங்கினார் விஜயகாந்த். இதனால், ரஜினிகாந்தின் மீது அளவுகடந்த அன்பை விஜயகாந்த் கொண்டுள்ளார்.

ஒரு முறை நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த், விழா ஒன்றில் கலந்துகொள்ள ரஜினியை நேரில் சென்று அழைத்தபோது, ரஜினியின் முன்பு தரையில் அமர்ந்துள்ளார் விஜயகாந்த்.

இதனை பார்த்து பதறிப்போன ரஜினி, ‘என்ன விஜி இப்படி பண்ற’ என்று கேட்டுள்ளார். அந்த அளவிற்கு ரஜினியின் மீது மரியாதையை விஜயகாந்த் கொண்டுள்ளார் என்பதை இந்த ஒரு நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading