Cinema

விஜயின் வீட்டிற்கு அருகில் பங்களா வாங்கிய ரஜனியின் மருமகன்!

ரஜினியின் இளைய மருமகன் விசாகன் விஜய் வீட்டிற்கு அருகில் பங்களா வாங்கியிருக்கிறாராம்.

அந்த பங்களா விற்பனைக்கு வந்ததை விசாகனுக்கு சொன்னதே விஜய் என்று கூறப்படுகிறது.

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் கணவர் விசாகன் தொழில் அதிபர் மட்டும் அல்ல நடிகரும் கூட.

அவர் சென்னையில் பங்களா வாங்க திட்டமிட்டாராம். இது குறித்த தகவல் காத்து வாக்கில் விஜய்யை எட்டியதாம்.

நீலாங்கரையில் விஜய்யின் வீட்டிற்கு அருகில் இருக்கும் பங்களா விற்பனைக்கு வந்திருக்கிறது. இது குறித்து அறிந்த விஜய் உடனே விசாகனுக்கு தகவல் தெரிவித்தாராம்.

விசாகனும் நேரில் வந்து பார்த்துவிட்டு பங்களா பிடித்துப் போகவே அதை வாங்கிவிட்டாராம். அந்த பங்களாவை ரூ. 40 கோடிக்கு வாங்கியிருக்கிறாராம் விசாகன்.

சவுந்தர்யாவும், விசாகனும் விரைவில் அந்த பங்களாவில் குடியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் சவுந்தர்யா இருந்தால் ரஜினி அங்கு அடிக்கடி வருவார்.

அப்படி மகளை பார்க்க வரும்போது விஜய்யையும் சந்திப்பார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். இதற்கிடையே சவுந்தர்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading