Cinema

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படத்தின் முதல் பாடல் ஒன்று தீபாவளி அன்று வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்கியது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் அந்தப் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் தற்போது பீஸ்ட் படத்தை இயக்கிய வருகிறார்.

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்திற்கு இசை அனிருத். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் பாடல் கம்போசிங் முடிந்துவிட்டதால் விஜய்யின் அறிமுகப் பாடல் தீபாவளி அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி அன்று ரஜினியின் ‘அண்ணாத்த’ மற்றும் அஜித்தின் ‘வலிமை’ ஆகிய படங்கள் வெளியாகும் என செய்தி வந்தது.

தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தின் பாடலும் வெளியாகும் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading