World

விண்வெளியில் ஆயிரம் நாட்கள் தங்கி சாதனைப் படைத்த வீரர்!

ரஷ்ய விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளியில் ஆயிரம் நாட்கள் தங்கி சாதனை படைத்தார்.

Oleg Kononenko (59) 2008-ஆம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஐந்து முறை பயணம் செய்துள்ளார்.

ஜூன் 4-ஆம் திகதி நிலவரப்படி, அவர் ஆயிரம் நாட்கள் விண்வெளியில் வாழ்ந்தார்.

இதன் மூலம், உலகிலேயே அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர் என்ற சாதனையை ஒலெக் படைத்துள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos) புதன்கிழமை அறிவித்தது.

அவர் செப்டம்பர் 23, 2024 வரை விண்வெளியில் இருப்பார். அதற்குள் அவர் 1,110 நாட்கள் விண்வெளியில் தங்கியிருப்பார்.

Oleg Kononenko-க்குப் பிறகு, விண்வெளியில் 878 நாட்கள் 11 மணி 29 நிமிடங்கள் 48 வினாடிகள் என்ற சாதனையை 2015-இல் ரஷ்யாவின் ஜெனடி படல்கா (Gennady Padalka) படைத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading