Sports

விபத்தில் சிக்கிய ஷேன் வோர்ன் மருத்துவமனையில் அனுமதி!

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோர்ன் 90களில் உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வலம் வந்தார். தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஷேன் வார்னே தன் குடும்பத்துடன் சிட்னியில் வசித்து வருகிறார்

இந்நிலையில் நேற்று தனது மகன் ஜாக்சனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு வாகனம் மோதி விபத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவர்கள் இருவரும் பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயமுற்ற நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஷேன் வார்ன் இந்த சம்பவத்தில் கடுமையான காயத்தையும் தவிர்த்துவிட்டாலும் கடும் வலி ஏற்பட்டதைத்தொடர்ந்து தனது உடலின் வேறு ஏதும் உபாதைகள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து ஷேன் வார்ன் கூறுகையில் “நான் கொஞ்சம் அடிபட்டு காயமடைந்துள்ளேன். மிகவும் வேதனையாக இருக்கிறேன்” என்று தெரிவித்ததாக தி ஏஜ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே 2021 டிசம்பர் 8 ஆம் திகதி கபாவில் தொடங்க உள்ள முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான வர்ணனை செய்யும் பணிக்கு வார்னே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading