World

விமானத்தின் இறக்கையில் கயிறு கட்டி ஊஞ்சலாடிய தலிபான்கள்!

விமானத்தின் இறக்கையில் தலிபான்கள் கயிறு கட்டி ஊஞ்சலாடும் வேடிக்கையான வீடியோ இணையத்தில் ரைவலாகியுள்ளது.

ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், ஆகஸ்ட் 31ம் திகதிக்குள் அமெரிக்கா உட்பட வெளிநாட்டு படைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஆகஸ்ட் 31ம் திகதியோடு வெளிநாட்டு படைகள் நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்த தலிபான்கள், நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால அரசாங்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

நாட்டை கைப்பற்றி உடன் நாங்கள் மாறிவிட்டோம் என கூறிய தலிபான்கள், தற்போது போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை தாக்கியும், போராடும் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரக்கையாளர்களை காவலில் வைத்து அடித்தும் தங்களின் உண்மை முகத்தை வெளிகாட்டி வருகின்றனர்.

இதனிடையே, ஆப்கானிஸ்தான் ஆயுதப்படைக்கு சொந்தமான போர் விமானத்தின் இறக்கையில் தலிபான்கள் கயிறு கட்டி ஊஞ்சலாடும் வேடிக்கையான வீடியோ இணையத்தில் ரைவலாகியுள்ளது.

குறித்த வீடியோவில், விமானத்தின் இறக்கைியல் துயைிட்டு அதில் கயிறு கட்டி கீழே பலகையுடன் இணைந்து, அதில் அமர்ந்த படி தலிபான் போராளி ஒருவர் ஊஞ்சலாடுகிறார், இருவர் ஊஞ்சாலை தள்ளி விடுகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading