Cinema

விமானத்தில் தனியாக பயணம் செய்த நடிகர் மாதவன்!

கொரோனாவின் 2வது அலை சற்று தளர்ந்து வந்தாலும், மக்கள் மனதில் இன்னும் பயம் போகவில்லை. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் விமான பயணத்தில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது. சமீபத்தில் நடிகர் மாதவன் அமெரிகி பன்டிட் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பையில் இருந்து துபாய்க்கு விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது பயணிகள் வேறு யாரும் இன்றி அவர் ஒருவர் மட்டுமே பயணித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் பயணித்த விமானத்தில் ஏராளமான பயணிகள் பதிவு செய்திருந்தார்கள். ஆனால், விமானத்துக்குள் சென்ற பிறகுதான் நான் மட்டும் தனியாக பயணிக்க போவது தெரிந்தது. எல்லோரும் அவரவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தங்கள் பயணத்தை ரத்து செய்திருந்தார்கள். கொரோனா பயமும் இதற்கு காரணம். இந்த நிலை சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இவ்வாறு மாதவன் கூறினார். இது தொடர்பாக வீடியோவையும் மாதவன் வெளியிட்டுள்ளார்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading