Local

விமானத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் பலி!

62 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் காணாமல்போன இந்தோனேசிய விமானத்தின் கறுப்புபெட்டியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள்  உடற்பாகங்களையும் மீட்டுள்ளதாக ள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் இரண்டு சிறுமிகள் அணிந்திருந்த டீ சேட் மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஜே 182 விமானத்தின்
கறுப்புபெட்டிகளை கண்டுபிடித்துள்ளதாக  அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் அதனை மீட்கலாம் என எதிர்பார்க்கின்றோம் என இந்தோனேசியாவின் இராணுவதளபதி ஹடிஜஹ்;ஜன்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை மீட்கப்பட்ட விமானத்தின் சிதைவுகளை அதிகாரிகள் தரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

ஜகார்த்தாவின் கரையோரத்தில் உள்ள தீவுப்பகுதிகளில் 75 அடி ஆழத்தில் அவை காணப்பட்டன என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல்பாகங்களையும் விமானத்தின் சிதைவுகளையும் வேறு சில பொருட்களையும் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்டஸ்ரீவிஜய விமானம் புறப்பட்டு நான்கு நிமிடங்களில் காணாமல்போயுள்ளது.

வெடிப்புச்சத்தமொன்றை கேட்டதாக சம்பவத்தை பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமானம்மின்னல்போல கடலில் விழுந்து வெடித்தது என சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
விமானம் எங்கள்கப்பலிற்கு மிக அருகில் விழுந்தது அதன் ஒரு பாகம் கிட்டத்தட்ட எங்கள் கப்பலின் மீது விழுந்தது நாங்கள் உடனடியாக கரைக்கு திரும்பினோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading