World

விமான விபத்தில் 132 பேரும் உயிரிழப்பு?

சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் ஒருவர் கூட மீட்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானம் 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கிச் சென்றது. அப்போது குவாங்ஸி மாகாணத்தில் மலைப்பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் அந்த பகுதியே கடும் புகை மூட்டமாக காட்சியளித்தது.

இதனை தொடர்ந்து மீட்பு படையினர் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. விபத்து நடந்து 18 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் உயிருடன் இருப்பவர்கள் யாரும் கண்டறியப்படவில்லை என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விமானத்தில் இருந்த 123 பேரும் விமானி உள்ளிட்ட 9 ஊழியர்களும் இறந்திருக்கலாம் என சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading