Sports

விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்!

நியூசிலாந்தில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் அரை சதம் விளாசினார். இதன்மூலம் அவர் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் பாபர் அசாம் 40 பந்துகளை எதிர்கொண்டு 55 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை அதிவேகமாக அடித்த ஆசிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனை பாபர் அசாம் முறியடித்தார். விராட் கோலி இந்த மைல்கல்லை 261 இன்னிங்சில் எட்டினார். ஆனால் பாபர் அசாம் தற்போது 251 இன்னிங்சில் இந்த மைல் கல்லை எட்டி சாதனை படைத்திருக்கிறார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading