Local

விறகுக் கட்டின் விலை உயர்கிறது மரங்கள் வெட்டுதலும் அதிகரிப்பு!

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் மண் ணெண்ணெய் தட்டுப்பாடு  போன்றவற்றால் முக்கிய நகரங்களிலும், மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் விறகின் தேவை அதிகரித்துள்ளதால் காடழிப்பு அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அதன்படி, காடுகளிலுள்ள மரங்கள் வெட்டப்படுவதும், விறகுகளை நகரங்களுக்கு கொண்டு செல்வதும் அதிகரித்துள்ளன.

அனுராதபுரம், புத்தளம், மொனராகலை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து கொழும்புக்கு  லொறிகள் மூலம் விறகுகளை ஏற்றிச் செல்லும் வியாபாரம் அதிகரித்துள்ளது.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் இறப்பர், கறுவா விறகுக் கட்டு ஒன்றின் விலை 30-50 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

மேலும் வீர, தம்ப, பாலை போன்ற விறகுகளும் கொழும்புக்கு கொண்டுவரப்படுவதாகத் தெரியவருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading