Local

விற்கமுடியாத 12,000 கிலோ கத்தரிக்காயை தீ வைத்து எரித்த விவசாயி!

தம்புல்லையில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் விளைந்த சுமார் 12,000 கிலோ கத்தரிக்காய்யை தீவைத்து எரித்துள்ளார்.

இதன்படி ,பூச்சிக்கொல்லி மருந்து இல்லாததால் விவசாய அதிகாரிகளின் முன் இவர் தனது தோட்டத்து கத்தரிக்காய்க்கு தீ வைத்துள்ளார்.

ஐந்து ஏக்கர் காணியில் விதைக்கப்பட்ட கத்தரிக்காயில் 14, 000 கிலோ அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் ,பூச்சிக்கொல்லி மருந்து கிடைக்காததால் இவற்றில் 12, 000 கிலோ விற்கமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ,2, 000 கிலோ மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது என குறித்த விவசாயி
கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading