Local

விவாகரத்தால் 320 கோடி டொலருக்கு அதிபதியான பெண்!

ஆசியாவில் இதுவரை நடந்த மிக விலை உயர்ந்த விவாகரத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது சீன தம்பதியின் விவாகரத்து. இந்த விவகாரத்தால், உலகிலேயே மிகப் பணக்கார கோடீஸ்வரிகளில் ஒருவராக இடம்பெற்றுள்ளார் சீனப் பெண்மணி.சீனாவின்  காங்டாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் தலைவர் டு வீமின்.இவரது மனைவி யுவான் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது டு வீமின் தனது தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்குகளை தனது முன்னாள் மனைவி யுவானுக்கு மாற்றி மாற்றியிருக்கிறார்.

இதன் மதிப்பு 320 கோடி அமெரிக்க டொலர் இருக்கும் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மே 29 அன்று தாக்கல் செய்யப்பட்ட தகவலின்படி, யுவான் உலகின் பணக்காரர்களின் வரிசையில் சேர்ந்து உள்ளார். யுவான் சீனாவின் சர்வதேச வணிக மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார்.49 வயதான யுவான் தற்போது நேரடியாக பங்குகளை வைத்திருக்கிறார்.ஷென்சென் நகரில் வசிக்கும் டு வீமின் மே 2011 மற்றும் ஆகஸ்ட் 2018 க்கு இடையில் காங்டாயின் இயக்குநராக பணியாற்றினார். அவர் இப்போது துணை பெய்ஜிங் மின்ஹாய் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் துணை பொது மேலாளராக உள்ளார்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading