Cinema

விவாகரத்துக்குப் பிறகு பெயரை மாற்றிய நடிகை சமந்தா!

நடிகை சமந்தா கடந்த சனிக்கிழமை ஒரு பரபரப்பான அறிக்கையை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும் இருவரும் தனி தனி பாதைகளில் பயணம் செய்யப்போவதாகவும், மேலும் மீடியா, ரசிகர்கள் இந்த கடினமான காலத்தில், எங்கள் பிரைவசியை மதிக்குமாறும் நடிகை சமந்தா கேட்டுக்கொண்டார்.

இந்த திருமணமுறிவு பற்றி பல வதந்திகள் பரவி வந்தன. அதில் முக்கியமான வதந்தி, சமூக வலைதளங்களில் நடிகை சமந்தா தனது முன்னாள் கனவர் நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை தனது பெயரில் இருந்து நீக்கி வெறும் ‘S’ என்று மட்டும் வைத்திருந்தார். இதனை வைத்து திருமண முறிவு பற்றி பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைதள கணக்குகளில் மீண்டும் பெயரை மாற்றியுள்ளார். இப்பொழுது அவரது கணக்குகளின் புதிய பெயராக மீண்டும் சமந்தா என்று மாற்றப்பட்டுள்ளது.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading