Cinema

விவாகரத்து அறிவிப்பால்  சவுந்தர்யா டுவிட்டரில் செய்த மாற்றம்!

இந்திய சினிமாவில் முன்னனி நடிகராக இருந்து வரும் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ள டுவிட் ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வலம்வரும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004ம் ஆண்டு நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்தார்.

இவர்களின் 18 வருட வாழ்க்கைக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தற்போது இருவரும் பிரியவுள்ளதாக இருவரும் பதிவு வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் ஐஸ்வர்யாவின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி டுவிட் செய்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்க Profile புகைப்படத்தை மாற்றியுள்ளார்.

சிறுவயதில் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை புதிய டுவிட்டர் புகைப்படமாக இன்று அதிகாலை மாற்றியுள்ளார். குறித்த விடயம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading