Local

வெப்பமான காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் சில பிரதேசங்களுக்கான வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மனித உடலால் உணரப்படும் வெப்பமானது மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கவனம் செலுத்தும் மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இதன் மூலம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மக்கள் அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading