Local

வெளிநாடுகளில் உள்ள 27 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்ப கோரிக்கை

தற்சமயம் வெளிநாடுகளில் உள்ள சுமார் 27 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்ப கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் தொழில்வாய்ப்புகளை இழந்து சிரமங்களை எதிர்கொண்டுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு சிறப்பு திட்டம் மேற்கொண்டுள்ளதாகம் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள அவர்களை வழிநடத்தும் சாத்தியத்தின் அடிப்படையில், விருப்பமுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை உலகளாவிய ரீதியில் உள்ள 67 இலங்கை தூதரகங்கள் மற்றும் ஏனைய அமைப்புகள் மூலம் அந்தந்த நாடுகளில் தங்க விரும்பும் இலங்கையர்களுக்கு உதவவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading