வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்!

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வேண்டுகோளின் பிரகாரம் தடுப்பூசி சான்றிதழ் வழங்குவதற்கு சுகாதார அமைச்ச நடவடிக்கை எடுத்துள்ளது.
தனிநபர் தடுப்பூசி அட்டை , கடவுச்சீட்டு, உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்ப்பிக்கும் பட்சத்தில் சுகாதாரவைத்திய அதிகாரியினால் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள்பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது அதிகாரப்பூர்வ தடுப்பூசி சான்றிதழாக ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
தடுப்பூசி சான்றிதழ் இன்றி பிரவேசிப்பதற்கு ஒரு சில நாடுகள் தடைவிதித்துள்ளநிலையில் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் உலகின் பல நாடுகள் தடுப்பூசியினை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களுக்குபயண அனுமதியினை வழங்கியுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் மேலும்தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, வெளிநாட்டுவேலைக்காக செல்கின்ற இலங்கையர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நாரஹேன்பிட்டி இராணுவவைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
அத்துடன், இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புபணியகத்தின் இணையதளத்தினூடாக பதிவுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்’ளது.
இதன்படி மேல்மாகாண இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து,அதற்கான ஆவணங்களைப் பூர்த்தி செய்த தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றுதொழில் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்தார்.
