Local

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது சட்ட ரீதியாக மாத்திரம் விசா பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் பொலிஸார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அவ்வாறில்லை எனில் ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதாக மக்களின் பணத்தை பெற்று ஏமாற்றும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்தநிலையில், அவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading