Local

வெளிநாட்டில் பொது ஏலத்தில் விடப்பட்ட இலங்கைப் பெண்கள்?

இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 12 இலங்கைப் பெண்கள் அந்நாட்டில் பொது ஏலத்தில் விடப்பட்டுள்ளனர்.


விபசாரத்துக்காக ஏலம் விடப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குறிப்பிடுகின்றார்.
இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அமைச்சர் இந்த விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.


இதற்குப் பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இது தொடர்பான விடயம் மற்றும் அது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொறுப்பான அமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading