வெளியே வந்த கறுப்பாடு அர்ஜூன மகேந்திரன்: ரணிலே காரணம் என தெரிவிப்பு!
இலங்கை மத்திய வங்கி கொள்ளையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் அர்ஜீன மகேந்திரனின் படமொன்று தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் தலைமறைவாகவுள்ளதாக தெரிவிக்கப்படும் அர்ஜீன மகேந்திரனின் இப்படத்தை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
தனது படத்தை வெளியிட எவ்வித தயக்கமும் தெரிவிக்காத அர்ஜூன மகேந்திரன் பெரும் குற்றச்சாட்டொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதாவது, மத்திய வங்கி கொள்ளையின் பிரதான குற்றவாளி ரணில் விக்ரமசிங்கவே எனவும் அவர் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தற்போது இலங்கை சமூக ஊடகபரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு எம்மோடு இணைந்திருங்கள்…

You must be logged in to post a comment.