Local

வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை அரசாங்கம் முடக்காவிட்டால் நாங்கள் நாட்டை முடக்குவோம்!

அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்தை எடுக்காவிட்டால் தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார்த்துறை பிரிவுகளை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் நேற்று (17) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பாதுகாப்பு தொடர்பில் சிந்திக்காது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

எனவே அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து குறித்த நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading