Local

வெள்ளை மாளிகையின் உயர் பதவிக்கு இலங்கை தமிழ்ப் பெண் தெரிவு!

அமெரிக்காவின் அடுத்த உப ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹரிஸ் தனது வெள்ளை மாளிகை சிரேஷ்ட பணிக்குழுவில் முக்கிய பதவிக்கு அமெரிக்காவின் உயர்பதவிக்கு தெரிவான யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொஸோக் லூ, அமெரிக்க உப ஜனாதிபதி கமலாதேவி ஹாரிஷின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமனம்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழரான ரோஹினி கொஸக்லுவை நேற்று நியமித்துள்ளார்.

உப ஜனாதிபதியின் Domestic Policy Advisor உள்ளக கொள்கை ஆலோசகர் என்ற இந்த இந்த நியமனம் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.

தற்போது பைடன் -ஹரிஸ் ஆட்சிமாற்றக் குழுவில் கமலா ஹரிஸின் சிரேஸ்ட ஆலோசகராக பதவிவகிக்கும் ரோஹிணி முன்னதாக பைடன் -ஹரிஸ் பிரசாரக் குழுவில் சிரேஷ்ட ஆலோசகராக பதவிவகித்திருந்தார்.

இதற்கு முன்பாக இவ்வருட ஆரம்பத்தில் ஹாவார்ட் பல்கலைக்ககழகத்தில் முக்கிய கல்வித்துறைப் பதவியை வகித்திருந்தார் ரோஹிணி.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading