World

வெவ்வேறு நிறங்களில் பிறந்த இரட்டை குழந்தைகள் தாய் குழப்பத்தில்!

பெண் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில் அவர்களின் நிற வேறுபாடை  பார்த்து ஒரு நிமிடம் அந்த பெண் குழம்பிய சம்பவம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இங்கிலாந்தின் நாட்டிங்காம் என்னும் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணான Chantelle Broughton என்பவருக்கு கடந்த சில மாதத்திற்கு முன் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

குழந்தையை செவிலியர்கள் கையில் கொடுத்த பிறகு தான், அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒரு சேர அவர்களுக்கு காத்திருந்தது.

ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரட்டைக் குழந்தைகள் கிடைத்த நிலையில், இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு நிறத்தில் இருந்துள்ளனர்.

இதில், பெண் குழந்தைக்கு Azirah என்றும், ஆண் குழந்தைக்கு Ayon என்றும் Chantelle – Ashton தம்பதி பெயரிட்டுள்ளனர்.

இதில், விந்தையான விஷயம் என்னவென்றால், குழந்தை Ayon வெள்ளை நிறத்தில் பச்சை நிறக் கண்களுடனும், குழந்தை Azirah மாநிறத்தில் பழுப்பு நிற கண்களுடனும் இருக்கின்றனர்.

இதன் காரணமாக, Chantelle-வின் குழந்தைகளை பார்க்கும் பலரும், இந்த இரண்டு குழந்தைகளும் உங்களுடையது தானா என பலரும் கேட்கிறார்களாம்.

இரட்டைக் குழந்தைகளுக்கு இடையே இருக்கும் இந்த வேறுபாடு என்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்திய தகவல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

வியக்க வைத்த காரணம்
இதற்கான காரணம் என்னவென்றால், Chantelle உடைய தாய் வழி தாத்தா ஒருவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்.

அதே போல, அவரது கணவரான Ashton-னின் பெற்றோரில் ஒருவர் ஜமைக்கா நாட்டையும் மற்றொருவர் ஸ்காட்லாந்து நாட்டையும் சேர்ந்தவர்கள்.

இதன் காரணமாக தான், அவர்களுக்கு கிடைத்த இரட்டைக் குழந்தைகளும் இரு வேறு நிறங்களில் இருந்துள்ளது.

அது மட்டுமில்லாமல், இப்படி வெவ்வேறு நிறங்களில் குழந்தைகள் பிறப்பது என்பது மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அரிதான நிகழ்வு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading