Local

வேகமாக அதிகரிக்கும் தொற்றாளர்களால் திணறும் வைத்தியர்கள்!

நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும், இதற்கான சரியான காரணத்தை கூற முடியாது என்றும் வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (ஜூலை 19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதை கூறினார்.

மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலத்துடன் ஒப்பிடும்போது இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 100 கொரோனா நோயாளிகள் இருந்தனர். இப்போது அது 200 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், அந்த 200 நோயாளிகளில் 100 நோயாளிகள் ஆக்ஸிஜனின் உதவியை பெறுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading