Features

வேப்ப எண்ணெய்யின் மருத்துவ குணங்கள்!

வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை தினமும் முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.

குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.

காயம் ஏற்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெய் தடவினால் சீக்கரம் காயம் சரியாகும்.

வேப்ப எண்ணெய்யில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் கிருமி தோற்று ஏற்படுவதை தடுக்கிறது.

வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.

தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்.

வேப்ப எண்ணெய் அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு உகந்தது.

வேப்ப எண்ணெய் புற்று நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

வேப்ப எண்ணெய்யை உடலில் தடவி படுத்தால் கொசு தொல்லையில் இருந்து விடுபடலாம். வேப்ப எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் கொசுகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.

சில சொட்டு வேப்ப எண்ணெய்யை நீர் சேமித்து வைக்கும் தொட்டியில் தெளித்தால் கொசு புழுக்கள் உருவாவதை தடுக்கலாம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading