Local

வேலைநிறுத்தத்துக்கு தயாராகும் மின்சார சபை ஊழியர்கள்!

மின்சார சபையின் தொழிற்சங்கம் எதிர்காலத்தில் அவசர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி ,யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்கா நிறுவனமொன்றுக்குக் கொடுப்பதற்கான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய ,எவ்வாறாயினும் முன் அறிவித்தல்கள் எதுவுமின்றி வேலைநிறுத்தத்துக்கு செல்ல தயாராக இல்லை என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளாா் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளாா்.

மேலும் ,இவ்வாறு வேலைநிறுத்தத்துக்குச் செல்வதால் மக்கள் பெரும் நெருக்கடியை சந்திபார்கள் என்றும், அதற்கு முன்னர் அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading