Local

வைத்தியசாலையில் நான்கு வருடங்களாக தேங்கியுள்ள சடலங்கள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் தேங்கியுள்ள இதுவரை அடையாளம் காணப்படாத சடலங்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் 2017 ஆம் ஆண்டு முதல் குறித்த சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில், தேங்கியிருந்ததாக நேற்று முன்தினம் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,கோவிட் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையில், வைத்தியசாலைகளின் பிரேத அறையில் தேங்கியுள்ள சடலங்கள் காரணமாக நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைக் குறைக்கும் நோக்கில் குறித்த சடலங்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

58 சடலங்கள் மாத்திரமே வைத்திருக்க கூடிய வசதிகள் உள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது 77 சடலங்கள் தேங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அவற்றில் 21 கோவிட் சடலங்களும், 77 சடலங்களில் 40 சடலங்கள் 2017 ஆம் ஆண்டு முதல் தேங்கியுள்ள நிலையில் அவை, ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படாதவை என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்தமையை அடுத்து குறித்த சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

இதனையடுத்தே குறித்த சடலங்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading