Local

வைத்தியசாலையில் முரளிதரன் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது!

இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென்று அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது

ஐ.பி.எல். போட்டித் தொடர் நடந்து வரும் நிலையில், அவர் இந்தியாவிலேயே தற்போது இருப்பதாகவும், வழமையான மருத்துவ பரிசோதனைக்கு அவர் சென்று திரும்பியதாகவும் குறித்த குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.

இதயம் தொடர்பிலான சிகிச்சைகளுக்காக முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கேட்டுபோது, இந்த செய்தி முற்றிலும் பொய்யாது என்று குறித்த குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது!

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading