Local

வைத்தியசாலையில் வயோதிபர்களை விட்டுச் செல்லும் நபர்கள்!

கொரோனா வைரஸ் தொற்றாத வயோதிப நபர்களை களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து வந்த விட்டுச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சிலர் எவ்வித நோயும் இல்லாத வயோதிப நபர்களை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் உள்ள ஆசனங்களில் அமர வைத்து செல்வதாக வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் உள்ள பாதுகாப்பு கெமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

நாட்டில் தொற்று நோய் பரவி வரும் சூழ்நிலையில், இப்படியான செயல்களை செய்ய வேண்டாம் என களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading