Cinema

ஷாருக்கானுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜவான் இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி – ஷாருக்கான் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பலரும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகி வருகின்றனர். அதன்படி, ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading