ஸ்கோப் சினிமாஸ் மல்டிபிளெக்ஸை தனது முதன்மையான ஈர்ப்பு மையமாக City of Dreams Sri Lanka-இன் The Shoppes வரவேற்கிறது
முதன்மையான தனிநபர் வர்த்தகம், உணவு, பொழுதுபோக்கு மற்றும் வாழ்வியல் மையமாக The Shoppes பரிணமிப்பதில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு அதன் அடுத்த கட்டத்தைக் குறிக்கிறது
கொழும்பு, 29 ஜூலை 2026: ஸ்கோப் சினிமாஸ் உத்தியோகபூர்வமாக விடுத்துள்ள அறிவிப்பின் மூலம், City of Dreams Sri Lanka-இன் The Shoppes தனது பரிணாம வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லொன்றை எட்டியுள்ளது. 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10ஆம் தளத்தில் திறக்கப்படவுள்ள ஸ்கோப் சினிமாஸ் மல்டிபிளெக்ஸ், அடுத்த தலைமுறை சினிமா தொழில்நுட்பத்தையும், இலங்கைச் சந்தைக்குப் புதியதான ஈர்ப்புமிக்க திரைப்பட அனுபவங்களையும் கொண்டுவந்து, இந்த மையத்தினை வரையறுக்கும் முக்கிய ஈர்ப்பு மையங்களில் ஒன்றாக மாறும்.
ஆகஸ்ட் 2025-ல் திறக்கப்பட்ட The Shoppes ஐப் பொறுத்தவரை, இந்த அறிவிப்பானதுக்கு முக்கிய மைல்கல்லொன்றைக் குறிக்கிறது. இது ஒரு திரையரங்கின் வருகையை விட அதற்கும் மேலாக, இந்த இடத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. மேலும், இலங்கையின் முதன்மையான ஒருங்கிணைந்த தனிநபர் வர்த்தகம், உணவு, பொழுதுபோக்கு மற்றும் வாழ்வியல் மையமாக அதன் ஸ்தானத்தை இது வலுப்படுத்துகிறது.
கொழும்பிலுள்ள சினமன் ஹோட்டல்களின் சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியும், City of Dreams Sri Lanka-இன் Cinnamon Life ஹோட்டலின் பொது முகாமையாளருமான கமல் முனசிங்க அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “The Shoppes என்பது ஒரு தனிநபர் வர்த்தகமையமாக மட்டும் கருதப்படவில்லை. மக்கள் அதிக நேரம் தங்குவதற்கும், அடிக்கடி திரும்ப வருவதற்கும், ஒவ்வொரு வருகையின்போதும் புதிய அனுபவம் ஒன்றைக் கண்டறிவதற்கும் ஊக்குவிக்கும் வகையில், கொள்வனவு, உணவு மற்றும் பொழுதுபோக்கை ஒன்றிணைக்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டது. ஸ்கோப் சினிமாஸை வரவேற்பது அந்தப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய படியாகும். கொழும்பின் வாழ்வியல் துறையைத் தொடர்ந்து வளர்ச்சிகாணச் செய்யும் அனுபவங்களை உருவாக்கும் எங்கள் இலட்சியத்தை இது வலுப்படுத்துகிறது.”
தெற்காசியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய, முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட வாழ்வியல் மையமான City of Dreams Sri Lanka-வில் அமைந்துள்ள The Shoppes, மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்ட, கட்டம் கட்டமான திறப்பு மூலம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 7 மற்றும் 8ஆம் தளங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், வரவிருக்கும் நீர்முனைத் தரைத்தளம் மற்றும் 9, 10ஆம் தளங்களின் செயல்பாடுகளின் ஆரம்பம், இந்த மையத்தின் சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதோடு, பல புதிய முக்கிய ஈர்ப்புகளையும் அனுபவங்களையும் அறிமுகப்படுத்தும்.
இலங்கையின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பொழுதுபோக்கு மையங்களில் ஒன்றாக மாறவிருக்கும் இந்த புதிய, ஐந்து திரைகளைக் கொண்ட மல்டிபிளெக்ஸ், உள்ளூர் சந்தையில் இதுவரை கிடைத்திராத ஒரு புதிய தலைமுறை சினிமா தொழில்நுட்பத்தையும், ஆழமாக ஈர்க்கின்ற அனுபவங்களையும் அறிமுகப்படுத்தும். ஒவ்வொரு பிரத்தியேக காத்திருக்கும் பகுதி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்தர உணவு வகைகளுடன் கூடிய இரண்டு பிரத்தியேக விஐபி சினிமா அரங்குகளுடன் இணைந்து, இந்த அனுபவம் இலங்கையில் திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு திரைப்பட அனுபவத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்கோப் சினிமாஸ் நிறுவனத்தின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நவீத் காதர் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “இந்த நாட்டில் இதுவரை கண்டிராத வகையிலான ஒரு திரையரங்க அனுபவத்தைத் தோற்றுவிக்க, City of Dreams Sri Lanka இலுள்ள The Shoppes உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அதிநவீன தொழில்நுட்பம், உயர்தர விருந்தோம்பல் மற்றும் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த மல்டிபிளெக்ஸ் திரையரங்கம் இலங்கையில் திரைப்படங்களைப் பார்க்கும் அனுபவத்திற்கு ஒரு புதிய தரநிலையை உருவாக்கும்; அதேசமயம் பெரிய திரையில் திரைப்படங்களைப் பார்த்து இரசிப்பதற்கான கூடுதல் காரணங்களையும் இது திரைப்பட இரசிகர்களுக்கு வழங்கும். சர்வதேச அளவிலான அனுபவங்களை இலங்கை இரசிகர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதும், நீடித்த நினைவுகளை உருவாக்குவதுமே எங்கள் முக்கிய நோக்கமாகும்.”
இலங்கையின் மிகப்பிரமாண்டமான திரைப்பட முதல்நாள் வெளியீட்டு நிகழ்வான Spider-Man: Brand New Day-இன் நிகழ்வுப் பங்காளராக City of Dreams Sri Lanka இன் The Shoppes செயல்பட்டது. ஜூலை 29 அன்று நடைபெற்ற இந்த பிரத்தியேக நிகழ்வில் ஊடகப் பிரதிநிதிகள், கூட்டாளர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக, புகழ்பெற்ற சூப்பர் ஹீரோவான ஸ்பைடர்-மேனுக்கு கண்கவர் காட்சியுடன் அஞ்சலி செலுத்தும் வகையில், இலங்கையின் முதல் ஸ்பைடர்-மேன் கருப்பொருள் கொண்ட ட்ரோன் காட்சி நிகழ்ச்சியையும் விருந்தினர்கள் கண்டு களித்தனர். உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்கும் The Shoppes-இன் திறனை இந்த உற்சாகமான கொண்டாட்டம் வெளிப்படுத்தியதுடன், ஒரு முக்கிய ஈர்ப்பு மையமாக ஸ்கோப் சினிமாஸின் வருகையையும் இது சிறப்பித்துக் காட்டியது.
The Shoppes-இன் முதலாம் ஆண்டு நிறைவுக்குச் சில நாட்களுக்கு முன்பாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான உத்வேகத்தை அளிக்கிறது. ஸ்கோப் சினிமாஸைத் தாண்டி, 9 மற்றும் 10வது தளங்களின் திறப்பு விழாவுடன், ஒரு புதிய உணவு அரங்கம், விரிவுபடுத்தப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கொழும்பின் இரவு நேர அனுபவத்தையே மாற்றியமைக்கும் வகையிலான துடிப்பான இரவு நேரக் கொண்டாட்டத் தளம் ஆகியவை அறிமுகமாகவுள்ளன.
சிறப்புமிக்க தனிநபர் விற்பனை நிறுவனங்கள் மற்றும் தனித்துவமான அனுபவங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையின் முன்னணி தனிநபர் வர்த்தகம், உணவு, பொழுதுபோக்கு மற்றும் வாழ்வியல் சார்ந்த மையங்களில் ஒன்றாக The Shoppes தனது ஸ்தானத்தை வலுப்படுத்தி வருகிறது. இது வருகை தருகின்றவர்கள், வாடகைதாரர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு அதிக மதிப்பினை உருவாக்குவதுடன், City of Dreams Sri Lanka-வின் ஒட்டுமொத்த ஈர்ப்பையும் மேம்படுத்துகிறது.

You must be logged in to post a comment.