World

ஹமாஸ் அமைப்பின் சுரங்கத்தில் இருந்து பணயக்கைதிகள் சடலங்களாக மீட்பு

ஹமாஸ் அமைப்பினரால் காசா முனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்களில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களான இடன் சிஷெர்யா, சிவ் டடூ, எலியொ டுலிடனொ, நிக் பெய்சர், ரொன் ஷெர்மென் ஆகிய 5 பேரை இஸ்ரேல் படையினர் சடலமாக மீட்டுள்ளனர்.

காசாவில் ஹமாஸ் சுரங்கத்தில் இருந்து 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 5 பேரின் உடல்களை பாதுகாப்புப்படையினர் இஸ்ரேலுக்கு கொண்டு சென்றனர்.

ஹமாஸ் அமைப்பின் சுரங்கத்தில் இருந்து பணயக்கைதிகள் சடலங்களாக மீட்பு | 5 Hostages Found Inside Hamas Tunnel

ஒப்பந்த அடிப்படையில் விடுதலை

காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அமைப்பின் சுரங்கத்தில் இருந்து பணயக்கைதிகள் சடலங்களாக மீட்பு | 5 Hostages Found Inside Hamas Tunnel

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading