World

ஹார்முஸ் ஜலசந்தியில் சிறைபிடிக்கப்பட்ட கப்பல்கள்: வெளியான வீடியோ ஆதாரம்

ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு கப்பல்களை ஈரானிய புரட்சிகர காவல் படை சிறைபிடித்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு கப்பல்கள் சிறைபிடிப்பு

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த MSC Francesca மற்றும் இந்தியா நோக்கிச் சென்ற Epaminondas ஆகிய இரண்டு கப்பல்கள் ஈரானிய புரட்சிகர காவல்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய கொடி பொறுத்தப்பட்ட அதிவேக படகுகள் இரண்டு கப்பல்களை நெருங்குவதையும், அதிலிருந்த முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய வீரர்கள் கப்பல்களுக்குள் ஏறுவதையும் இது தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில் பார்க்க முடிகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியில் சிறைபிடிக்கப்பட்ட கப்பல்கள்: வெளியான வீடியோ ஆதாரம் | Irgc Seizes 2 Vessels In Strait Of Hormuz

ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் தொடர்புடைய Nour News நிறுவனம் வெளியிட்ட தகவலில், சிறைபிடிப்பு நடவடிக்கையின் போது ஈரான் படைகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

ஈரானிய பாதுகாப்பு படையின் எச்சரிக்கைகளை சம்பந்தப்பட்ட கப்பல்கள் அலட்சியப்படுத்தியதால் இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல்  நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் வைத்துள்ள சட்டத்தை மீறும் எந்தவொரு செயலை ஈரான் சகித்துக் கொள்ளாது என்று IRGC எச்சரித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading