ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத வந்த 40 பெண்களை திருப்பி அனுப்பிய கல்லூரி நிர்வாகம்!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஹிஜாப் அணிந்து வந்த தேர்வு எழுத வந்த சுமார் 40 மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூருவில் உள்ள கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய கல்லூரி நிர்வாகம், ஹிஜாபை அகற்றிய பிறகே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என தெரிவித்தது.
இதனால் கல்லூரிக்கு வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவிகள், தேர்வு எழுதாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
