Entertainment

10 கேன்களை தலையில் நிற்க வைத்து சாதனைப் படைத்த நபர்!

தலையில் 10 கேன்களை ஒட்ட வைத்து சாதனை படைத்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர்.

இவரது வித்தியாசமான காற்றை உறிஞ்சும் தோலின் உதவியுடன் அவர் இந்த சாதனையைப் படைத்திருக்கிறார்

கடந்த 2016ம் ஆண்டு இவர் 8 கேன்களை 5 வினாடிக்கு தலையில் நிற்க வைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாமி கீடன் என்பவருக்கு கேன்ஹெட் என்ற பெயரும் உள்ளது. இவரது பேரக்குழந்தைகள் கிராண்ட்பா -க்கு பதிலாக கேன்பா என்றே அழைக்கின்றனர்.

தலையில் கேன்களை நிருத்தி வைக்கும் இந்த திறமையால் இவர் புகழ்பெற்றிருந்தார்.

2019ம் ஆண்டில் இவரது சாதனை சுனிச்சி கன்னொ என்ற ஜப்பானியரால் முறியடிக்கப்பட்டது.

அந்த சாதனையை திரும்பப் பெறும் விதமாக இப்போது தலையில் 10 கேன்களை வைத்து சாதனைப்படைத்திருக்கிறார் அவர்.

ஜாமி கீடன் தலையில் இயற்கையாகவே ஒட்டும் தன்மை இருக்கிறது. முதன் முதலில் முகத்தை ஷேவ் செய்யும் போது அதனை உணர்ந்ததாக அவர் கூறுகிறார்.

இந்த ஒட்டும் தன்மையை வைத்து வித்தை காட்டி வருகிறார் ஜாமி. ஒரு வார இறுதியில் அவருக்கு 10 முதல் 20 ஆயிரம் டாலர்கள் வரை கிடைக்குமாம்.

நம்ம ஊரில் கரகாட்டம் ஆடுபவர்கள் ஒரு கரகத்துக்கே திணருகையில் இவர் 9 கேன்களை சுமக்கிறார். வெளியூர் ஆட்டக்காரர்னா வெளியூர் ஆட்டக்காரர் தான்!

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading