Cinema

100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் நடிகர் சூர்யா

100 அரசுப் பள்ளி மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா!
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில்.
அபர்ணா பாலமுரளி,தெலுங்கு நடிகர் மோகன் பாபு,கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
இந்நிலையில், அரசுப் பள்ளியில் பயிலும் 100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்ல சூரரை போற்று படக்குழு முடிவு எடுத்துள்ளது.
விமான நிறுவனம் தொடங்குவது தொடர்பான கதை களத்தில் சூர்யா நடிக்கிறார். இதனால் பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்ல படக்குழு முடிவு எடுத்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading